Showing posts with label கண்மணியே பேசு. Show all posts
Showing posts with label கண்மணியே பேசு. Show all posts

Friday, October 13, 2017

கண்மணியே பேசு

கண்மணியே பேசு

படம் : காக்கி சட்டை (1985)
இசை : இளையராஜா
பாடியவர் :  S.P.பாலசுப்பிரமணியம், S.ஜானகி
பாடல் வரி : வைரமுத்து

கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
உன் கண்கள் இரு ஊதாப்பூ
இது பூவில் பூத்த பூவையோ

கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
உன் கண்கள் இரு ஊதாப்பூ
இது பூவில் பூத்த பூவையோ
அந்தப்புறம் இந்தப்புறம் விழி மையிட்ட
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு
ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே
அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே
தோளிலும் என் மார்பிலும்
கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது

கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
உன் கண்கள் இரு ஊதாப்பூ
இது பூவில் பூத்த பூவையோ

உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்
சொல்லித் தருவேன் விழி மூடாமல்
கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்
கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்
வானகம் இவ்வையகம் யாவுமே என் கைவசம் நீதான் தந்தாய்....
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
உன் கண்கள் இரு ஊதாப்பூ
இது பூவில் பூத்த பூவையோ