Showing posts with label கண்ணிழந்த பிள்ளைக்கு. Show all posts

Wednesday, October 4, 2017

கண்ணிழந்த பிள்ளைக்கு

கண்ணிழந்த பிள்ளைக்கு

கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம் நல்லவர்க்கு ஒரு குணம்

தாயின் குரல் கேட்டதுண்டு தந்தை முகம் பார்த்ததுண்டு
ஜீவனற்ற கண்களுக்கு தேவன் முகம் தெரிகிறது

அந்த மரக் கிளைதனிலே வந்தமர்ந்த பறவை ஒன்று

தந்ததொரு அன்பு கண்டு தந்தை தன்னை மறந்ததுண்டு

கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம் நல்லவர்க்கு ஒரு குணம்
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்

ஏற்றி விட்ட ஏணி ஒன்று நின்றபடி நிற்கிறது
ஏறி விட்ட ஒரு மனமோ வேறு வழி நடக்கிறது

ஏற்றியதும் குற்றமில்லை ஏணியிலும் பாவமில்லை

மாற்றியது கடவுள் என்னும் மாயக்காரன் லீலையம்மா

கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்

தேவனவன் கோயிலிலே கோடை வெய்யில் சுடுகிறது
தேவி அவள் வாசலிலோ செல்வ மழை பொழிகிறது

நல்லவர்க்குப் பொருள் எதற்கு? நாடி வரும் புகழ் எதற்கு?

உன்னுடைய வசந்தத்திலே ஒன்றும் இல்லை ரசிப்பதற்கு

கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம் நல்லவர்க்கு ஒரு குணம்
கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்.......