Showing posts with label கண்கள் எங்கே….நெஞ்சமும் எங்கே…….. Show all posts
Showing posts with label கண்கள் எங்கே….நெஞ்சமும் எங்கே…….. Show all posts

Thursday, November 9, 2017

கண்கள் எங்கே….நெஞ்சமும் எங்கே…….


கண்கள் எங்கே….நெஞ்சமும் எங்கே…….

திரைப்படம்: கர்ணன் 
இசை: M.S.விஸ்வநாதன்
  
பாடியவர்: பி.சுசிலா 

கண்கள் எங்கே…..
நெஞ்சமும் எங்கே…….
கண்டபோதே சென்றன அங்கே….

கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

கால்கள் இங்கே மேனியும் இங்கே
கால்கள் இங்கே மேனியும் இங்கே
காவலின்றி வந்தன இங்கே…ஆ…ஆ…ஆ….

கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்

ஆ…ஆ….ஆ…ஆ…ஆ….

மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கண்டு துடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கண்டு துடிக்கும்
துணை கொள்ள அவனின்றித் தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம்….ஆ…ஆ….ஆ.

கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே..ஏ…ஏ…ஏ…ஏ…ஏ…ஏ…

இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன்
குணமென்ன அறியேன்

ஈதொன்றும் கேளாமல் எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன்….ஆ…ஆ….ஆ.

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே..ஏ…ஏ…ஏ…ஏ…ஏ…ஏ…