Showing posts with label ஒரு ராகம் பாடலோடு. Show all posts
Showing posts with label ஒரு ராகம் பாடலோடு. Show all posts

Tuesday, October 3, 2017

ஒரு ராகம் பாடலோடு

ஒரு ராகம் பாடலோடு

படம் :ஆனந்தராகம்
பாடியவர்கள்: யேசுதாஸ், ஜானகி

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது

மாலை நேரக் காற்றில் மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடினாலும் என்னை ஆளும் தெய்வம் நீயே
காதல் தேவி எங்கே தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை நேரில் வந்த நேரமே
என்னுள்ளம் இன்று வானில் போகுதே

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது

ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்
வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்
காதல் தந்த பந்தம் காதல் எனும் கீதம்
ஜீவனாதம் கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே
வராத காலம் வந்து சேர்ந்ததே

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது