Showing posts with label ஒரு கிளி உருகுது. Show all posts
Showing posts with label ஒரு கிளி உருகுது. Show all posts

Tuesday, October 10, 2017

ஒரு கிளி உருகுது

ஒரு கிளி உருகுது

படம் : ஆனந்த கும்மி (1983)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S. ஜானகி, S.P. சைலஜா
பாடல் வரி : கங்கை அமரன

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஓ மைனா மைனா
தளிரிது மலருது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா

நிலவெரியும் இரவுகளில் ஓ மைனா ஓ மைனா
மணல் வெளியில் சடுகுடு தான் ஓ மைனா ஓ மைனா
கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஓ மைனா ஓ மைனா

இலைகளிலும் கிளைகளிலும் ஓ மைனா ஓ மைனா
இரு குயில்கள் பெயரெழுதும் ஓ மைனா ஓ மைனா
வயல்வெளியில் பலக்கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஓ மைனா ஓ மைனா