Showing posts with label உறவு சொல்ல. Show all posts
Showing posts with label உறவு சொல்ல. Show all posts

Saturday, October 14, 2017

உறவு சொல்ல

உறவு சொல்ல

உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் -
அவன்உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு மேடை அரசனாகப் போனவன் -
நெஞ்சில்இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்

உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் -
அவன்உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு மேடை அரசனாகப் போனவன் -
நெஞ்சில்இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்

பொன்பொருளைக் கொள்ளை கொள்ள ஓடுவான் -
யாரும்அன்னை என்று சொல்லி விட்டால் வாடுவான்
தன் பொருளை அவர்க்கு தந்து தேற்றுவான் -
நெடுஞ்சாலை வரை துணைக்கு வந்து வாழ்த்துவான்
சாலை வரை துணைக்கு வந்து வாழ்த்துவான்

உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் -
அவன்உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு மேடை அரசனாகப் போனவன் -
நெஞ்சில்இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்

பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன் -
ஆனால்பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
கலையழகை ரசிப்பதிலே புதியவன் -
உடற்கட்டழகில் சிறந்திருக்கும் இளையவன்
கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்

உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் -
அவன்உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு மேடை அரசனாகப் போனவன் -
நெஞ்சில்இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்

இன்று நாளை அவனும் கூட மாறலாம் -
அவன்இரவில் தூங்கி பகலில் கூட வாழலாம்
கன்று கண்ட தாயைப் போல ஆகலாம் _
அன்புகாதல் பாசம் அவனும் கூடக் காணலாம்
காதல் பாசம் அவனும் கூடக் காணலாம்

உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் -
அவன்உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன்
இரவு மேடை அரசனாகப் போனவன் -
நெஞ்சில்இரக்கமுள்ள திருடனாக ஆனவன்
இரக்கமுள்ள திருடனாக ஆனவன்