இது ஒரு நிலாக்காலம்
திரைப்படம்: டிக் டிக் டிக்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்
ஆடைகூட பாரமாகும் ஹே பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம் பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்
ஆஆஆ…நாதிர்தனா திரனனா திரனனா திரனனா நாதிர்தனனனா
நாதிர்தனா திரனனா திரனனா திரனனா நாதிர்தனனனா
நாதிர்தனா நாதிர்தனா நாதிர்தனா…நாதிர்தனா நாதிர்தனா நாதிர்தனா
நாதிர்தனா திர்தனா திர்தனா திர்திர்தனா
நா திர் திர் திர் திர் திர் திர் திர் திர் திர் திர் திர் திர்
நாதிர் திர்திர் நாதிர் திர்திர் நாதிர் திர்திர் நாதிர் திர்திர்
நாதிர் திர்திர் திர்திர் திர்திர் திர்திர் திர்திர் திர்திர் திர்திர்
திர்திரனா…திர்திரனா…திர்திரனா… திர்திரனா…திர்திரனா
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைப் பார்த்தாலே ஹோ அருவி நிமிராதோ
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைப் பார்த்தாலே ஹோ அருவி நிமிராதோ
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே ஹோ ஓ ஓ ஓ
யாரும் வந்து நடக்காத சாலை நீயே ஹோ ஓ ஓ ஓ
உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்கக் கண்டாளே
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்
னா னனா…னா னனா னா…னா…னா…னா
னன னன னன னன னன னன னா…னா னனா…னா னனா
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ பூவைத் தூவாதோ
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ பூவைத் தூவாதோ
கண்ணாடி உனைக்கண்டு கண்கள் கூசும் ஹோ ஓ ஓ ஓ
வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும் ஹோ ஓ ஓ ஓ
பருவப்பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்
ஆடைகூட பாரமாகும் ஹே பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம் பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம் இரவுகள் கனாக்காணும்