Showing posts with label ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே. Show all posts
Showing posts with label ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே. Show all posts

Friday, November 3, 2017

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே !

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே !

பழமொழியின் விளக்கம்!
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே !

நாம் அறிந்த விளக்கம் :

பழமொழி கொஞ்சம் வஞ்சப் புகழ்ச்சியாக பெண்கள் மீது இடப்பட்ட கருத்தாக உலக வழக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. புராணங்களில் படிக்கும் போது அசுரனுக்கு வரம் தந்து வாழ்வளிக்கும் பெண் தெய்வங்கள் பின் அந்த அசுரனையே அழிக்க நேரிட்டதால் இப்பழமொழி வந்திருக்க கூடும் என்றும் சிலர் கருதுகின்றனர்.

விளக்கம் :

இப்பழமொழியில் இரண்டு விஷயங்கள் நளினமாய் மறைக்கப்பட்டுள்ளன. நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே என்று வந்திருக்க வேண்டும். அவசர உலகில் பேசுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த பழமொழியில் நல்லவை, தீயவை என்ற இரண்டு வார்த்தைகளும் மறக்கப்பட்டு ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று வந்துவிட்டது.

பழமொழி
ஆவதும்_அழிவதும்_பெண்ணாலே