Showing posts with label அழகு மலர் ஆட. Show all posts
Showing posts with label அழகு மலர் ஆட. Show all posts

Sunday, October 1, 2017

அழகு மலர் ஆட

அழகு மலர் ஆட

அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்

விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது

(அழகு)

ஆகாயாம் ் இல்லாமலே
ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது
ஆதாரம் இல்லாமலே
ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது

தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது
விடியாத இரவென்றும் கிடையாது என்ற
ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது

வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
பதிலேதும் இல்லாத கேள்வி..

(அழகு)

ஊதாத புல்லங்குழல் ஒரு பொழுதும்
சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா
ஒரு துணையை தேடாத வெள்ளை புறா

பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும்
பொன் மேனி நெருப்பாக கொதிக்கின்றது
நீரூற்று  பாயாத நிலம் போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றது

தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
வேறு என்ன நான் செய்த பாவம்

அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்.
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது

அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்..