Showing posts with label அல்லிராணி சில. Show all posts
Showing posts with label அல்லிராணி சில. Show all posts

Saturday, October 21, 2017

அல்லிராணி சில

அல்லிராணி சில

அல்லிராணி சில வெள்ளி தீபங்களை
கையிலேந்தி வருக....
ஆசையோடு சில நாணல் தேவதைகள்
நடனமாடி வருக !!....

கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன் !!....

காலங்கள் சென்றாலும் நீயே தெய்வம்
கல்லாக நின்றாலும் நீயே தெய்வம்...
தெய்வீக பண்பு
நான் கொண்டாடும் அன்பு...
என் உள்ளம் பொன்னென்று
என்னாளும் நம்பு !...
ஆஹா.. ஓஹோ.. லாலா..ஆஹா..
மஞ்சளோடு மண மாலை சூடி வரும்
நல்ல காலம் வருக
மன்னனோடு ஒரு ராணி போல வரும்
இன்ப நாளும் வருக !!....

கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன் !!...

பெண் வாழ்வில் செல்வாக்கு தன்மானமே....
தன்மானம் தான் காக்கும் கல்யாணமே !....
நான் கண்ணீரை வெல்லும்
ஒரு பெண்ணாக வேண்டும்
நான் பொன்னோடு பொட்டோடு தாயாக வேண்டும்....
வேண்டும் வேண்டும் !.... ஹூஹூம்.. ஹூஹூம்
பிள்ளையாடி வர செல்வம் கோடி பெறும்
நல்ல காலம் வருக....
உள்ளம் போல இணை ஒன்று சேர்ந்து விட
தெய்வம் காவல் தருக !!!...