Showing posts with label அடி வண்ண கிளியே இங்கு. Show all posts
Showing posts with label அடி வண்ண கிளியே இங்கு. Show all posts

Tuesday, October 31, 2017

அடி வண்ண கிளியே இங்கு

அடி வண்ண கிளியே இங்கு

  
திரைப்படம்:மிருதங்க சக்ரவர்த்தி
பாடகர்கள்:டி.எம்.சௌந்தரராஜன்,P.சுசீலா
இசையமைப்பாளர்:எம்.எஸ்.விஸ்வநாதன் 
பாடலாசிரியர் :புலமை பித்தன்

ஆண் அடி வண்ணக் கிளியே இங்கு...

தன்னந்தனியே என்னை...

விட்டு விட்டுப் போக சம்மதமோ...

பல்லவி

ஆண் அடி வண்ணக் கிளியே இங்கு

தன்னந்தனியே என்னை

விட்டு விட்டுப் போக சம்மதமோ

விட்டு விட்டுப் போக சம்மதமோ

இசை சரணம் - 1

ஆண் சிரித்தால் சிரித்து அழுதால் துடித்து

வாழ்ந்திடும் சொந்தங்கள் நாம் அடைந்தோம்

சிரித்தால் சிரித்து அழுதால் துடித்து

வாழ்ந்திடும் சொந்தங்கள் நாம் அடைந்தோம்

இசையால் இணைந்தோம் இதயம் கலந்தோம்

ஈருயிர் ஒன்றென்று நாம் இருந்தோம்

இசையால் இணைந்தோம் இதயம் கலந்தோம்

ஈருயிர் ஒன்றென்று நாம் இருந்தோம்

அடி வண்ணக் கிளியே இங்கு

தன்னந்தனியே என்னை

விட்டு விட்டுப் போக சம்மதமோ

பெண் இந்த வண்ணக் கிளியே இங்கு

தன்னந்தனியே உம்மை

விட்டு விட்டுப் போக எண்ணிடுமோ

விட்டு விட்டுப் போக எண்ணிடுமோ

இசை சரணம் - 2

பெண் இனியும் இருப்போம் பிரிவை மறப்போம்

நீ உள்ள நாள் மட்டும் நான் இருப்பேன்

இனியும் இருப்போம் பிரிவை மறப்போம்

நீ உள்ள நாள் மட்டும் நான் இருப்பேன்

உறவில் மனைவி பரிவில் அன்னை

துன்பங்கள் வாராமல் நான் தடுப்பேன்

உறவில் மனைவி பரிவில் அன்னை

துன்பங்கள் வாராமல் நான் தடுப்பேன்

இந்த வண்ணக் கிளியே இங்கு

தன்னந்தனியே உம்மை

விட்டு விட்டுப் போக எண்ணிடுமோ

இசை சரணம் - 3

ஆண் கோயில் விளக்கே விடியும் கிழக்கே

அர்ச்சனை தேவாரம் நீ எனக்கு

கோயில் விளக்கே விடியும் கிழக்கே

அர்ச்சனை தேவாரம் நீ எனக்கு

பெண் எழுதா வேதம் அது உன் பாதம்

தேவனின் சங்கீதம் நீ எனக்கு

எழுதா வேதம் அது உன் பாதம்

தேவனின் சங்கீதம் நீ எனக்கு

இந்த வண்ணக் கிளியே இங்கு

தன்னந்தனியே உம்மை

விட்டு விட்டுப் போக எண்ணிடுமோ

ஆண் அடி வண்ணக் கிளியே இங்கு...

தன்னந்தனியே என்னை...

விட்டு விட்டு... ஹ...