அஞ்சாத சிங்கம்
அஞ்சாத சிங்கம் என் காளை இது
பஞ்சாப் பறக்கவிடும் ஆளை இந்த
ஆபத்தை நாடிவரும் மாவீரன்
பாரிலே யாரடி ?...
அஞ்சாத சிங்கம் என் காளை இது
பஞ்சாப் பறக்கவிடும் ஆளை இந்த
ஆபத்தை நாடிவரும் மாவீரன்
பாரிலே யாரடி ?...
கூரான கொம்பு ரெண்டு சீராக மின்னக் கண்டு
கூரான கொம்பு ரெண்டு சீராக மின்ன கண்டு...
வீராதி வீரனெல்லாம் கூறாமல் போனதுண்டு
மாறாத ஆசையுடன் வீராப்பு பேசிக்கொண்டு
மாட்டைப் பிடிக்க வந்து ஓட்டம் பிடித்ததுண்டு !....
ஓ...ஓ...ஓ... ஓஓஓஓஓஓஓ
மாட்டைப் பிடிக்க வந்து ஓட்டம் பிடித்ததுண்டு....
ஆண் வாடை கண்டாலே ஆகாது
இது ஆவேசம் கொண்டாலே பொல்லாதது !!....
அஞ்சாத சிங்கம் என் காளை இது
பஞ்சாப் பறக்கவிடும் ஆளை இந்த
ஆபத்தை நாடிவரும் மாவீரன்
பாரிலே யாரடி ?...
கும்மாளம் போடும் உன் காளை
இது கொட்டம் அடங்குமடி நாளை.... அங்கே
கூசாமல் போராடும் மாவீரனை
நேரிலே பாரடி ...
வேலேந்தும் காளையெல்லாம் உன்
வேல் விழியால் சொக்கிடுவார்...
வேங்கை போல் துள்ளிடுவார்
வெற்றி அடைந்திடுவார்
வேங்கை போல் துள்ளிடுவார்
வெற்றி அடைந்திடுவார்
கண்ணாலம் பண்ணாத ஆண் பிள்ளை.... உனக்குக்
கட்டாயம் ஆவானே மாப்பிள்ளை ...
அஞ்சாத சிங்கம் என் காளை இது
பஞ்சாப் பறக்கவிடும் ஆளை இந்த
ஆபத்தை நாடிவரும் மாவீரன்
பாரிலே யாரடி ?...