7. வரி - நிதி ஆதாரம்
வரி தான் அரசின் நிதி ஆதாரம். நேரடி வரியான வருமான வரியும் (Income Tax), மறைமுக வரியான பொருள் மற்றும் சேவை வரி (GST), சுங்க வரி (Customs duty), ஆயத்தீர்வை (Cess) போன்றவை ஒன்றிய அரசின் கீழ் வருபவை.
நேரடி வரியான சொத்து வரி, கழிவு நீர் வரி, மற்றும் GST யின் ஒரு பகுதியான மாநில GST (SGST) யும் மாநில அரசின் கீழ் வருபவை. இது போக சுங்கச்சாவடிகள் தனியார் வசூலிப்பவை அதைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம், இது போக பெட்றோல், டீசலுக்குத் தனித் தனி வரி, இது போல வரி என்கிற பெயரில் அரசுக்கு பல லட்சம் கோடி வருவாய் வருகிறது
இந்த வரி வருவாய்க்கு ஒரு இணைய தளம் ஏற்படுத்தி, ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு வசூல், எவ்வளவு செலவு என்று தெரியப்படுத்தி, கூடுதல் வருமானம் உள்ள மாநிலங்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கலாம். வருமான வரி , விற்பனை வரி உச்சவரம்பு நிர்ணயித்து அதற்கு மேல் கட்டுபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கலாம், அவர்களின் எல்லா பயணங்களிலும் பயணச்சீட்டு முன்னுரிமை அளிக்கலாம் அல்லது பயணத்தொகையில் தள்ளுபடி வழங்கலாம், இந்தச் சலுகைகளை வருகின்ற மாநில அரசு ஒன்றிய அரசிடம் போராடி வாங்க வேண்டும்
No comments:
Post a Comment