Tuesday, February 2, 2021

6. யாசகர் மறுவாழ்வுத் திட்டம்




6. யாசகர் மறுவாழ்வுத் திட்டம்

ஒவ்வொரு சிக்னலிலும் ஒரு கூட்டம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது, இவர்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறார்கள், எங்கு போகிறார்கள், எங்கு வசிக்கிறார்கள் என்னும் கேள்வி நம் எல்லோர் மனத்திலும் எழாமல் இல்லை, 

இவர்களை ஏன் அரசு தத்து எடுத்துக் கொண்டு அவர்களுக்கு தகுதி வாரியாகப் பயிற்சி கொடுத்து சாலையோரப் பூங்காக்கள் அமைத்தல், சாலை சுத்தம் செய்தல், கைவினைப் பொருள் செய்தல், அரசு அலுவலகங்களுக்குத் தேவையான தளவாடங்களை (Furniture) உருவாக்குதல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பார்த்துக் கொள்ளக்கூடாது.

இவர்களுக்கென்று தனி வாரியம் அமைக்கப்பட்டு சக மனிதர்கள் போல் சுயமரியாதையுடன் ஏன் வாழ வைக்கக் கூடாது. “யாசகரில்லாத தமிழகம்” - கேட்கும் போதே எவ்வளவு இனிமையாக இருக்கிறது, ‘தமிழன் டா’ என்று அப்போது காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்

No comments:

Post a Comment