Tuesday, February 2, 2021

4. தேவையில்லை சுங்கச் சாவடிகள்



4. தேவையில்லை சுங்கச் சாவடிகள்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்ல தரசு

வரி வகைகளை இயற்றி, அதன் மூலம் வருவாயைப் பெருக்கிக் காத்து அதை வகுத்து மக்களைக் காப்பதே அரசின் கடமை, ஆனால் அரசு என்ன செய்கிறது, தனியாரை சாலை அமைக்கச் சொல்லி அவர்கள் சம்பாதிக்க வரைமுறை இல்லாமல் சுங்க வசூல் செய்ய வைக்கிறது

சாலைகள் அரசின் கடமை, இப்படி அவர்களின் ஒவ்வொரு கடமைக்கும் நம்மிடம் தனித்தனியே வரி வசூலிப்பார்களேயானால் அப்புறம் எதற்கு வருமான வரியும் விற்பனை வரியும்?

அரசு-தனியார் கூட்டு முயற்சிகள் அனைத்தையும் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு அரசுடைமையாக்கப் பட வேண்டும். தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் அனைத்தையும் மூடுபவர்களுக்கே நம் ஓட்டு

No comments:

Post a Comment