Tuesday, January 26, 2021

நாகரிக கோமாளி

இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்
நாங்களும் மாறினோம்
இன்று அதையே 
கே.எப்.சி என்று கோழிகறி
விக்கிறான்....

உப்பு கரியில் பல் தேய்த்தோம்
பற்பசையை அறிமுகப் படுத்தினான்
இப்போது உங்கள் பற்பசையில் 
உப்பு இருக்கா
என்று கேட்கிறான்....

மண்பானை மண்சட்டியில் சமைத்தோம்
உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்
இன்று மண்சட்டியில் சமைத்த உணவை அதிக விலையில் ஸ்டார் ஹோட்டல் களில் விக்கிறான்....

நாட்டு மாட்டின் பாலை நாம் பயன்படுத்தினோம்
ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்
இன்று அவனே ஆசியா நாடுகளில் இருந்து நாட்டு மாடுகளை ஏற்றுமதி செய்கிறான்....

இளநீர் பதனீர் மோர்  பருகினோம்
கோக் பெப்சி பவன்டோ ஐ கொண்டு வந்தான்
இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்....

காப்ரேட் கம்பெனி களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த நாம்
முட்டாள்களின் இனமாக நாமாகத்தானிருப்போம்....

நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை
வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்
அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்....

ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்
காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியை விட்டோம்
வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்....

நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வைத்தோம்
திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைத்தோம்
உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்....

பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்
இப்படியே வஞ்சகம் சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது....

நம் பாரம்பரியத்தை தொலைத்து அடிமுட்டாளாகி
நாகரிக கோமாளி 
ஆகி விட்டோம்
பணத்துக்காக வாக்களிக்க
வாக்களித்த பின் இலவசம் வாங்க கற்றுக் கொண்டோம்....

கோ.ரா.ரவி.பட்டு நெசவாளர்.காஞ்சிபுரம்

No comments:

Post a Comment