Tuesday, January 26, 2021

போடுங்கம்மா ஓட்டு-3. காடுகள்-Avichi Muthaiah



3. காடுகள்

காடுகள் இயற்கையின் அரண், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலின் கடைசி நம்பிக்கை, காடுகளை அழித்து அழித்து விளை நிலங்களாகவும், அடுக்கு மாடி கட்டிடங்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன, காடுகளைப் பாதுகாக்க வேண்டும். இன்று வருகின்ற கொரோனா தொற்று முதலான நுண்ணுயிரிப் பரவல் இதன் மூலம் தடுக்கப்படும் என்று உலக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்

பெரு நிறுவனங்களுக்கு நிலத்தை தாரை வார்க்கும் போது, CSR எனப்படும் பெரு நிறுவன-சமுக- கடமையாக தரிசு நிலங்களைக் குறுங்காடுகளாக மாற்றப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட வேண்டும், அவற்றை அவரகள் பராமரிக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்

காட்டைப் பற்றி நன்கு அறிந்த பெரியாண்பிள்ளைகள் கொண்டு இன்றைய இளைஞர்களுக்கு காடு நடை என்ற பெயரில் காட்டுக்குள் அழைத்துச் சென்று காடு பற்றி ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டும். காடு வளர்ப்பு உறுதிமொழி தருபவர்க்கே நம் ஓட்டு.

No comments:

Post a Comment