Tuesday, January 26, 2021

போடுங்கம்மா ஓட்டு-2. சுற்றுச் சூழல்-Avichi Muthaiah


2. சுற்றுச் சூழல்:

நீர் நிலைகளை தூர் வாரி நிலத்தடி நீரையும் மழை நீரையும் ஒரு சேரப் பாதுகாக்க வேண்டும்

மழை நீர் சேகரிக்க அரசு கட்டிடங்களை, பூங்காக்களை, மேம்பாலங்களை, சாலைகளைப் பயன்படுத்தி எவ்வளவு அதன் மூலம் சேமித்தோம், நிலத்தடி நீரைப் புதிப்பித்தோம் என்று புதிய அளவைகளைத் தீர்மானித்து அளவீடுகளை வெளியிட வேண்டும். வாரந்தோரும் பூங்காக்களில் மக்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்

கூவம், அடையாறு, கோசஸ்தலை, நொய்யல், வைகை, தாமிரபரணி, வடபெண்ணை, தென்பெண்ணை போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆறுகளை மறு சீரமைத்து தேம்ஸ் நதி போல் ஓட வைக்க வேண்டும், அதன் கரைகளில் பூங்காக்கள் அமைத்து, மக்கள் வந்து போகும்படி அதே சமயம் தங்கிவிடாத படி பாதுகாக்க வேண்டும்

No comments:

Post a Comment