Saturday, November 4, 2017

குடகு மலை காற்றில்

குடகு மலை காற்றில்

குடகு மலை காற்றில் வரும்
பாட்டு கேட்க்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவு தான் உன்னை சுத்தி பறக்குது
என்னோட மனசு தான் கண்டபடி தவிக்கிது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலை காற்றில் வரும்
பாட்டு கேட்க்குதா என் பைங்கிளி

மானே மயிலே மரகத குயிலே
தேனே நான் பாடும் தெம்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டயோ என் வாக்கே
உன்னை எண்ணி நான் தான்
ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிற்கும்  தேர் போல ஆனேன்
பூ பூத்த சோலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத தாகம் கொண்டு
பாடும் பாட்டு

குடகு மலை காற்றில் ஒரு
பாட்டு பாடுது இந்த பைங்கிளி
குடகு மலை காற்றில் ஒரு
பாட்டு பாடுது இந்த பைங்கிளி

மறந்தால் தானே  நினைக்கனும் மாமா
நினைவே நீதானே நீதானே
மனசும் மனசும் இணைந்தது மாமா
நினைச்சு தவிச்சேனே நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தெற்கு காத்தோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனம் தடுமாறமாட்டேன்
ஊரென்ன சொன்ன என்ன ஒன்னாக நின்றா என்ன
உன் பேரை பாடி நிற்ப்பேன் மாமா
தூங்காம உன்னை எண்ணி துடிச்சாளே
இந்த கன்னி வா மாமா

குடகு மலை காற்றில் வரும்
பாட்டு கேட்க்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவு தான் உன்னை சுத்தி பறக்குது
என்னோட மனசு தான் கண்டபடி தவிக்கிது
ஒத்த வழி என் வழி தானே மானே

குடகு மலை காற்றில் ஒரு
பாட்டு பாடுது இந்த பைங்கிளி
குடகு மலை காற்றில் ஒரு
பாட்டு பாடுது இந்த பைங்கிளி

No comments:

Post a Comment