மடி மீது தலை
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
மங்களக் குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே...
பொழுதும் புலரும் அணைப்பிலே
ஆஹா ஓஹோ ம்ம் !!.....
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்.....
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே....
சேவல் குரலே கூவாதே சேவல் குரலே கூவாதே....
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே !!....
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்....
வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே....
சாயும் நிலவின் மழையிலே
காலம் நடக்கும் உறவிலே !!....
No comments:
Post a Comment