Wednesday, November 1, 2017

மயிலாடும் தோப்பில்

மயிலாடும் தோப்பில்

மயிலாடும் தோப்பில் மானாடக்  கண்டேன்
மானானது யாரோ மகராஜனே நீயோ !...
மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ !!....

மயிலாடும் தோப்பில் மானாடக்  கண்டேன்
மானானது யாரோ மகராஜனே நீயோ !...
மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ !!....

வெல்வெட்டுக்  கன்னம் தொட்டு
வைக்கின்ற முத்தம் எல்லாம்
கல்வெட்டுப்  போலே நிற்கும்
கண்ணே நம் காலம் எல்லாம்....
நேசித்து  நெஞ்சில் வைத்து நீண்ட காலம்
யாசித்த  பெண்ணுக்கு இன்று ராஜ யோகம்
யோசித்து  ஒவ்வொன்றாக காதல் பாடம்
வாசித்து  அர்த்தம் சொல்லும் வேளையாகும் !...
மை விழியோரம் ஐவகை பானம்
மன்மதன் போடும்  மங்கள நேரம்
பொன்மாலைப்  பொழுதினிலே !!....

மயிலாடும் தோப்பில் மானாடக்  கண்டேன்
மானானது யாரோ மகராஜனே நீயோ !...
மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ !!....

உள்ளத்தின் உண்டியலில்
உன் ஆசை எண்ணங்களே
சேமித்து  வைத்த கன்னி
சிந்தித்தாள் உன்னை எண்ணி...
சேமித்த அன்புத்தேனை நானும் வாங்க
சாமத்தில் செவ்வந்திப்பூ நாளும் ஏங்க
பூவுக்கு வந்ததின்று பூஜை நேரம்
போகட்டும் வெட்கமின்று காத தூரம் !...
மீதங்களின்றி மோகங்கள் கூட
மோகங்கள் நூறு ராகங்கள் பாட
சங்கீத மயக்கத்திலே !!....

          
மயிலாடும் தோப்பில் மானாடக்  கண்டேன்
மானானது யாரோ மகராஜனே நீயோ !...
மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ !!....   

No comments:

Post a Comment