பட்டு நிலா மெட்டெடுத்து
படம் : வால்டர் வெற்றிவேல்
பாடல் : கவிஞர் வாலி
இசை : இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது பைல் அ ஹோய்
இங்கு பக்கம் வந்து பம்பரமாய்
ஆடுவது ஸ்டைலா ஹோய்
கோழி சத்தம் கேட்கும் வரை
இங்கு கூட்டத்துக்கு கொறச்சல் இல்ல அடி ஹோய்....
அடி சிங்களா பைலா எங்க இந்தியா வந்து
கொண்டாட்டம் போட உங்க கும்மாளம் கூட
பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது பைல் அ ஹோய்
இங்கு பக்கம் வந்து பம்பரமாய்
ஆடுவது ஸ்டைலா ஹோய்
கோழி சத்தம் கேட்கும் வரை
இங்கு கூட்டத்துக்கு கொறச்சல் இல்ல அடி ஹோய்....
மாமனுக்கும் மச்சானுக்கும் வித்யாசமா
பாட்டு கட்டி வெச்சிருக்கேன் ஏராளமா
வேண்டியதை வாங்கிக்கலாம் தாராளமா
வேரெதுக்கு வந்திருக்கேன் ஊர்கோலமா
என் பாட்டு நேயர் விருப்பம்
இது எப்பொழுதும் இங்கே இருக்கும்
ஒன்னுக்கொன்னு நல்ல பொருத்தம்
இதில் மற்றவர்க்கு என்ன வருத்தம்
கோழி சத்தம் கேட்கும் வரை
இங்கு கூட்டத்துக்கு கொறச்சல் இல்ல அடி ஹோய்
பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது பைல் அ ஹோய்
இங்கு பக்கம் வந்து பம்பரமாய்
ஆடுவது ஸ்டைலா ஹோய்
கோழி சத்தம் கேட்கும் வரை
இங்கு கூட்டத்துக்கு கொறச்சல் இல்ல அடி ஹோய்....
தாளம் தட்ட ஆள் இருக்கு என் பாட்டுக்கு
நான் அழைச்சா தென்றல் வரும் பின் பாட்டுக்கு
எத்தனையோ ரசிகர் மன்றம் என் பேருக்கு
ஏற்கெனவே இருக்குதையா ஊர் ஊருக்கு
சீட்டிகளை மெல்ல அடிச்சா
இங்கு சில்லறையா அள்ளி எறச்சா
பாட்டேடுப்போம் சூப்பர் மையிலில்
எங்கும் நிக்காம ஓடும் ரயிலில்
கோழி சத்தம் கேட்கும் வரை
இங்கு கூட்டத்துக்கு கொறச்சல் இல்ல அடி ஹோய்
பட்டு நிலா மெட்டெடுத்து பாடுவது பைல் அ ஹோய்
இங்கு பக்கம் வந்து பம்பரமாய்
ஆடுவது ஸ்டைலா ஹோய்
கோழி சத்தம் கேட்கும் வரை
இங்கு கூட்டத்துக்கு கொறச்சல் இல்ல அடி ஹோய்....
No comments:
Post a Comment