அழகன் முருகனிடம்
படம்: பஞ்சவர்ணக்கிளி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: வாலி
குரல்: பி.சுசீலா
சத்தியம், சிவம், சுந்தரம்! ஆஆஆ.... சரவணன் திருப்புகழ் மந்திரம்! ஆஆஆ....
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன். அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்! ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)
பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே, கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்! பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை,
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்! ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)
மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ! மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ! அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன், அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்! ஆ ஆ..
ா
(அழகன் முருகனிடம்)
No comments:
Post a Comment