Tuesday, October 10, 2017

என்னப் பாடச் சொல்லாதே

என்னப் பாடச் சொல்லாதே


படம் – ஆண்பாவம் (1985)
பாடியவர் –S. ஜானகி & குழுவினர்
இசை – இளையராஜா 
வரிகள்: வாலி
இயக்குனர் : பாண்டியராஜன்


பெண் : என்னப் பாடச் சொல்லாதே
        நான் கண்ட படி பாடிப்புடுவேன்

பெண் : என்னப் பாடச் சொல்லாதே
         நான் கண்ட படி பாடிப்புடுவேன்
        என்னப் பாடச் சொல்லாதே
        நான் கண்ட படி பாடிப்புடுவேன்
        அதக் கேட்டா மடையனுக்கும் ஞானம்  
               பொறந்திடும்
        மூடிக் கெடக்கும் பல கண்ணும் தெறந்திடும்
        கேட்டா மடையனுக்கும்

குழு : ஞானம் பொறந்திடும்

பெண் : அட மூடிக் கெடக்கும் பல

குழு : கண்ணும் தெறந்திடும்

பெண் : பாடச் சொல்லாதே
         நான் கண்ட படி பாடிப்புடுவேன்

பெண் : தேவாரமும் படிச்சோம் திருவாசகம்     
                 படிச்சோம்
         தெரியாம திருக்குறளும் தான் படிச்சோம்
         ஆனான படிப்பை எல்லாம் அன்னாடம்      
                 படிச்சுபுட்டு
          புரியாம தெரியாம தான் முழிச்சோம்
          அறிவான ஆத்திச் சுவடி கொடுத்தாளே 
                 ஔவை பாட்டி
                 அதக் கூட பாடி என்ன கிழிச்சுப்புட்டோம்

குழு : அறிவான ஆத்திச் சுவடி கொடுத்தாளே
                ஔவை பாட்டி
        அதக் கூட பாடி என்ன கிழிச்சுப்புட்டோம்

பெண் : நாடும் என்னாச்சு நம்ம ஊரும் என்னாச்சு
         அட பேசிப் பேசித் தான் நல்ல பொழுதும் 
                போயாச்சு
         இந்த தேசம் ரொம்ப மோசம் இத பாக்கும்
                போது
                 இப்போ

         என்னப் பாடச் சொல்லாதே
         நான் கண்ட படி பாடிப்புடுவேன்
         என்னப் பாடச் சொல்லாதே
                நான் கண்ட படி பாடிப்புடுவேன்

பெண் : காம்போதியும் தெரியும் கல்யாணியும்
                புரியும்
         பொதுவாக நெனச்சதும் நான்      
                பாட்டெடுப்பேன்
         ஆகாத பொழப்பை எல்லாம் அநியாய   
                நடப்பை எல்லாம்
        அஞ்சாம எம் பாட்டில் போட்டொடைப்பேன்
         நாய் வால நிமுத்துறதும் காக்காய                       
                வெளுக்குறதும்
         அம்மாடி யாரால ஆகும் இப்போ

குழு : நாய் வால நிமுத்துறதும் காக்காய 
                வெளுக்குறதும்
        அம்மாடி யாரால ஆகும் இப்போ

பெண் : பாக்கப் போனாக்கா நான் பொட்டப் புள்ள      
                தான்
         அட போட்டி போட்டாக்கா ரொம்ப கெட்டப் 
               புள்ள தான்
        ஒரு வேகம் ஒரு கோபம் ஒண்ணு சேரும்  
               போது இப்போ

        என்னப் பாடச் சொல்லாதே
        நான் கண்ட படி பாடிப்புடுவேன்
        என்னப் பாடச் சொல்லாதே
        நான் கண்ட படி பாடிப்புடுவேன்
       அதக் கேட்டா மடையனுக்கும்

குழு : ஞானம் பொறந்திடும்

பெண் : அட மூடிக் கெடக்கும் பல

குழு : கண்ணும் தெறந்திடும்

பெண் : பாடச் சொல்லாதே
         நான் கண்ட படி பாடிப்புடுவேன்

No comments:

Post a Comment