Sunday, October 1, 2017

வசந்த கால கோலங்கள்

வசந்த கால கோலங்கள்

படம்....தியாகம்

வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்.....

வசந்த கால கோலங்கள்....

அலையிலாடும் காகிதம்
அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள்
அவர்க்குள் என்ன உறவுகள்....

கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்.....

வசந்த கால கோலங்கள்....
வானில் விழுந்த கோடுகள்.....

தேரில் ஏறும் முன்னரே...
தேவன் உள்ளம் தெரிந்தது....
நல்ல வேளை திருவுளம்....
நடக்க வில்லை திருமணம்....

நன்றி....நன்றி.... தேவா....
உன்னை மறக்க முடியுமா....

கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்.....

வசந்த கால கோலங்கள்.....

No comments:

Post a Comment