கூண்டுக்குள்ள என்ன
ஆ: கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
அடி மானே மானே ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
(கூண்டு )
பெ: கண்ணு வளத்து கண்ணு தான துடிசுதுன்னா
எதோ நடக்குமின்னு பேச்சு
ஆ: மானம் கொரையுமின்னு மாசு படியுமின்னு
வீணா கதை முடிஞ்சு போச்சு
பெ: ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம்
மாமன் பேரை சொல்லி பேசுது
ஆ: ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு
ஊரும் சேந்து என்னை ஏசுது
பெ: மாமா மாமா ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
பெ: கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே
ஆ: தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும்
அடி மானே உன்னை தினம் பாடும்
பெ: கஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும்
இந்த மாமன் கதையை தினம் பேசும்
ஆ: பொள்ளாச்சி சந்தையிலே கொண்டந்த சேலையிலே
சாயம் இன்னும் விட்டு போகல
பெ: பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்திலே
நேர்ந்து முடிச்ச கடன் தீரல
ஆ: மானே மனே ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
(கூண்டு )
No comments:
Post a Comment