Tuesday, October 10, 2017

வைதேகி ராமன்

வைதேகி ராமன்

வைதேகி ராமன் கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே     வையம் வானகம் யாவும் தோரணம்

மெய்யை மெய் தொடும் காதல் காரணம்

வைதேகி ராமன் கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே    ஆ..ஆ..

காவேரி நீர் போல ஓடும் ஆடும்

கல்யாண ராகங்கள் பாடும்

காணாத கோலங்கள் யாவும் காணும்

கண்ணொடு மோகங்கள் கூடும்

ஏதோ ஓர் பொன் மின்னல் என்னுள்ளிலே

ஏதேதோ கூறாதோ பூந்தென்றலே

காதோடு ஆனந்தம் கேட்கின்றதே

ஏன் என்று என் உள்ளம் பார்க்கின்றதே   (ஸ்வர வரிசை)

வைதேகி ராமன் கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே         (ஸ்வர வரிசை)

பூவான மிருதங்கம் எங்கும் பொங்கும்

புரியாத லயம் கூட சங்கம்

கூவாத குயில் தந்த சந்தம் சிந்தும்

குறையாத சுகம் எந்தன் சொந்தம்

நான் காணும் ஆனந்தம் ஆரோஹணம்

வான் தூவும் பூவெல்லாம் அவரோஹணம்

சங்கீத தாளங்கள் போடும் மனம்

சந்தோஷ ராகங்கள் பாடும் தினம்

மிதிலையில் வைதேகி ராமன் கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே

வையம் வானகம் யாவும் தோரணம்

மெய்யை மெய் தொடும் காதல் காரணம்

வைதேகி ராமன் கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே

No comments:

Post a Comment