Sunday, October 1, 2017

தொடுவானம் தொடுகின்ற

தொடுவானம் தொடுகின்ற

பாடலாசிரியர் : #வைரமுத்து

தொடுவானம் தொடுகின்ற நேரம்

தொலைவினில் போகும்

ஆனால் தொலைந்துமே போகும்

தொடுவானமாய் பக்கமாகிறாய்

தொடும்போதிலே தொலைவாகிறாய்

தொடுவானம் தொடுகின்ற நேரம்

தொலைவினில் போகும்

ஆனால் தொலைந்துமே போகும்

இதயத்திலே தீ பிடித்து

கனவெல்லாம் கருகியதே

உயிரே நீ உருகும் முன்னே

கண்ணே கண்பேனோ

இலை மேலே பனித்துளி போல்

இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்

காற்றடித்தால் சிதறுகின்றோம்

பொண்ணே பூந்தேனே

வலி என்றால் காதலின் வலிதான்

வலிகளில் பெரிது

அது வாழ்வினும் கொடிது

உனை நீங்கியே உயிர் கரைகிறேன்

வான் நீலத்தில் எனை புதைக்கிறேன்

வலி என்றால் காதலின் வலிதான்

வலிகளில் பெரிது

அது வாழ்வினும் கொடிது

உனை நீங்கியே உயிர் கரைகிறேன்

வான் நீலத்தில் எனை புதைக்கிறேன்

இதயத்திலே தீ பிடித்து

கனவெல்லாம் கருகியதே

உயிரே நீ உருகும் முன்னே

கண்ணே கண்பேனோ

இலை மேலே பனித்துளி போல்

இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்

காற்றடித்தால் சிதறுகின்றோம்

பொண்ணே பூந்தேனே

காதல் என்னை பிளிகிறதே

கண்ணீர் நதியாய் வழிகிறதே

நினைப்பதும் தொல்லை

மறப்பதும் தொல்லை

வாழ்வே வலிக்கிறதே

காட்டில் தொலைந்த மழைத்துளிபோல்

கண்ணே நீயும் தொலைந்த்தென்ன

நீரினைத் தேடும் வேரினைப்போல

பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்

கண்கள் ரெண்டும் மூடும்போது

நூறு வண்ணம் தோன்றுதே

மீண்டும் கண்கள் பார்க்கும்போது

சோகம் சூன்யமாகுதே

சிறு பொழுது பிரிந்ததற்க்கே

பல பொழுது கதறிவிட்டாய்

ஜென்மங்களாய் பெண் துயரம்

அறிவாயோ நீ……………….

No comments:

Post a Comment