Wednesday, October 11, 2017

காதல் காதல் என்று

காதல் காதல் என்று

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
படம் : உத்தரவின்றி உள்ளே வா (1970)
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியன் - பி.சுசீலா
இசையமைப்பாளர் : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்

ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஹாஹ
ஹா ஆஹாஹா ஆ...ஆஆஆ

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?
மன்னன் வந்தானோ?
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?
மன்னன் வந்தானோ?

கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப்
பூப்பந்தல் எந்தன் மனம்

ம்ம்ம் ஆஹாஹா ஆஆஆ

கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப்
பூப்பந்தல் எந்தன் மனம்
நீராட நீ செல்லும் யமுனா நதி
நீராட நீ செல்லும் யமுனா நதி
மங்கல மங்கையின் மேனியும் தங்கிய
மஞ்சள் நதியோ குங்கும நதியோ?

ஆ..ஆ.. ஆஆஆ ஆஆஆ

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?

ஆஹாஹா ஆஹாஹா ஹா ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஆஆஆ

காணாத உறவொன்று நேர் வந்தது
கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது
வாழாதப் பெண் ஒன்று வழி கண்டது
வாழாதப் பெண் ஒன்று வழி கண்டது
வாடியப் பூங்கொடி நீரினில் ஆடுது
மன்னா வருக மாலை தருக

ஆஆ.ஆஆ. ஆஆஆ ஆஆஆ

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?

பூமாலை நீ தந்து சீராட்டினாய்
புகழ் மாலை நான் தந்து தாலாட்டுவேன்
பாமாலை பல கோடிப் பாராட்டுவேன்
பாமாலை பல கோடிப் பாராட்டுவேன்
பள்ளியின் மீதொரு மெல்லிய நாடகம்
சொல்லிட வருவேன் ஏதோ தருவேன்

ஆஆஆ ஆ... ஆஆஆ ஆஆஆ

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?
மன்னன் வந்தானோ

No comments:

Post a Comment