Sunday, October 15, 2017

மன்னவன் வந்தானடி

மன்னவன் வந்தானடி

மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
சிறு மலர் மனமொரு குறு நகை நலம் பெற
மலர்விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே
மன்னவன் வந்தானடி..

செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுத்தேன் – வண்ண
சந்தத்திலே கவிதை சரம் தொடுத்தேன்
மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன் மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன் – இனி
முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும்

மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
சிறு மலர் மனமொரு குறு நகை நலம் பெற
மலர்விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே
மன்னவன் வந்தானடி..

தூவிய பூவினில் மேனிகள் ஆடிட
நாயகன் நாயகி பாவனை காட்ட வரும்ம்ம் மன்னவன் வந்தானடி....

தத்தித் தாங்கிட தக தரிகிடதோம்
தித்தாங்கிட தக தரிகிடதோம்
தகதித் தாங்கிடதக தரிகிடதோம்
தித்தாங்கிடதக தரிகிடதோம்

தகதரிகிடதோம் தகதரிகிடதோம்
தகதரிகிடதோம் தகதரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தத்தா

ஸரிகம பதநி ஸரிகமபதநி சுரமொடு ஜதியொடு
நாதகீத ராகபாவம் தான் பெறவே
மன்னவன் வந்தானடி

தத்ததிம் ணம்தகிட தகஜுணுத கிடதகதரிகிடதோம்
தகதணதோம் தத்திம்
தத்தகிட கிடதகதரிகிடதோம் தகதகிட
கிடதகதரிககிடதோம்
தகிடதத்தோம் கிடதத்தோம்
கிடதத்தோம் தத்தா
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
சிறு மலர் மனமொரு குறு நகை நலம் பெற
மலர்விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே
மன்னவன் வந்தானடி..
காதற் கவிதை கடலெனப் பெருகிட
மாதர் மனமும் மயிலென நடமிடவே
மன்னவன் வந்தானடி
ததகிதகண தஜுண தாகிடகத
தஜுணததிமி தரிகிடதக தத்தா தாங்கிடதக
தகதித் தாங்கிடதக தரிகிடதக தத்தா
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி
சிறு மலர் மனமொரு குறு நகை நலம் பெற
மலர்விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே
மன்னவன் வந்தானடி..

No comments:

Post a Comment