Sunday, October 15, 2017

அன்னக்கிளி ஒன்னத்தேடுதே

அன்னக்கிளி ஒன்னத்தேடுதே

அன்னக்கிளி ஒன்னத்தேடுதே
ஆறு மாசம் ஒரு வருசம் ஆவாரம்பு மேனி வாடுதே

நதியோரம் பொறந்தேன் கொடிபோல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம்போல் நடந்தேன்
உறங்காத...உறங்காத கண்களுக்கு ஓலகொண்டு மையெழுதி
கலங்காம காத்திருக்கேன் கைப்பிடிக்க வருவாரோ?

அன்னக்கிளி ஒன்னத்தேடுதே
ஆறு மாசம் ஒரு வருசம் ஆவாரம்பு மேனி வாடுதே

கனவோடு சிலநாள் நெனவோடு சிலநாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பலநாள்
மழபெஞ்சா...மழபெஞ்சா வெதவெதச்சு நாத்து நட்டு கதிரறுத்து
போரடிக்கும் பொண்ணு மாமன் பொழுதிருக்க வருவாரோ

அன்னக்கிளி ஒன்னத்தேடுதே
ஆறு மாசம் ஒரு வருசம் ஆவாரம்பு மேனி வாடுதே

நதியென்றால் அங்கே கரையுண்டு காவல்
கொடியென்றால் அதைக்காக்க மரமே காவல்
புள்ளிப்போட்ட...புள்ளிப்போட்ட ரவிக்கைக்காரி புளியம்பூ சேலக்காரி
நெல்லறுத்துப் போகையில் யார் கன்னியெந்தன் காவலடி

அன்னக்கிளி ஒன்னத்தேடுதே
ஆறு மாசம் ஒரு வருசம் ஆவாரம்பு மேனி வாடுதே

#அன்னக்கிளி1976

No comments:

Post a Comment