பேரைச் சொல்லவா
பேரைச் சொல்லவா, அது நியாயமாகுமா
.
திரைப்படம் : குரு
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம் ஜானகி
பாடல் : கண்ணதாசன்
இசை : இளையராஜா
வெளியான ஆண்டு : 1980
பல்லவி
பெண் : பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா
நான் பாடும் ஸ்ரீராகம்
எந் நாளுமே நீயல்லவா
என் கண்ணனே என் மன்னவா
ஆண் : தங்க மாங்கனி என் தர்ம தேவதை
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
நான் பாடும் ஸ்ரீராகம்
என் நாளுமே நீயல்லவா
என் பூங்கொடி இடை சொல்லவா
பெண் : பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா
சரணம் - 1
ஆண் : இடையொரு கொடி இதழொரு கனி
இன்ப லோகமே உன் கண்கள் தானடி
பெண் : மலரெனும் முகம் அணைவது சுகம்
ஒன்று போதுமே இனி உங்கள் தேன்மொழி
ஆண் : நான் தேடினேன் பூந்தோட்டமே வந்தது
பெண் : நான் கேட்டது அருகே நின்றது
ஆண் : இனிமேல் பறக்கட்டும் பறவைகள் இரண்டும்
பெண் : பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா
ஆண் : பபபபபா பபபபபபாபா
சரணம் - 2
பெண் : புது மழையிது சுவை தரும் மது
வைரப் பூச்சரம் அது இதழில் வந்தது
ஆண் : இனியது இது கனிந்தது அது
இளமையென்பது உன் உடலில் உள்ளது
பெண் : நீ போட்டது என் கண்ணிலே மந்திரம்
ஆண் : நான் பார்த்தது அழகின் ஆலயம்
பெண் : இது தான் உலகத்தை ரசிக்கின்ற பருவம்
ஆண் : தங்க மாங்கனி என் தர்ம தேவதை
பெண் : பபபபபா பபபபபபாபா
சரணம் - 3
ஆண் : நவமணி ரதம் நடைபெறும் விதம்
நமது கோவிலில் இனி நல்ல உற்சவம்
பெண் : கவிதைகள் தரும் கலையுந்தன் வசம்
கங்கையாறுபோல் இனி பொங்கும் மங்களம்
ஆண் : ஓராயிரம் தேனாறுகள் வந்தன
பெண் : நீராடுவோம் தினமும் நீந்துவோம்
ஆண் : சரிதான் நடக்கட்டும் இளமையின் ரசனை
பெண் : பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா
ஆண் : தங்க மாங்கனி என் தர்ம தேவதை
பெண் : நான் பாடும் ஸ்ரீராகம்
ல லால லா... ல லால லா...
ஆண் : ல லால லா... ல லால லா...
ப பாப பா... ப பாப பா...
No comments:
Post a Comment