Showing posts with label ஆசீவகம். Show all posts
Showing posts with label ஆசீவகம். Show all posts

Tuesday, December 15, 2020

தமிழகத்தில் ஆசீவகர்கள்-என்னுரை

என்னுரை


தமிழகத்தில் ஆசீவகர்கள் என்ற இந்நூல் ஒரு பேராற்றினின்றும் கிளை த்தோடும் சிற்றாறு. தமிழ் நூல்களைத் தொடக்ககால முதல் காப்பியகாலம்வரை ஆழ்நிலையில் ஆய்வு செய்ய வேண்டு மென்பது பல்லாண்டுகளாக என்னுட் கிடக்கும் பேரவா, இது, ஒருகால் முழுநிலையிற் சாத்தியமாகமலே போகலாம் ஆனால் இம் முயற்சியில் ஓரளவிற்காவது நான் வெற்றி பெறுவேன் என்பது எனது நம்பிக்கை .


எந்த நூலை ஆய்வு நிலையில் நோக்கினும், அந்நூலெழுந்த கால பண்பாட்டுப் பின்னணியினைப் புரிந்து கொள்வது இன்றியமையாதது. உலகிலுள்ள வளம் பெற்ற எந்த மொழி இலக்கியத்திற்கும் தமிழ் தரத்திற் குறைந்ததல்ல. தமிழிலுள்ள வளங்களை வெளிப்படுத்தும் முயற்சிகள் தான் காய்தல் உவத்தல் இல்லாத நிலையில் இன்று விரைவுபடுத்தப் படவேண்டும். ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்து வடமொழிகளைப் பயின்று, அவற்றிலுள்ள இலக்கியங்களை உலகிற்கு அறிமுகம் செய்த அளவிற்குத் தமிழில் கவனம் செலுத்தவில்லை. இதனால் உலக இலக்கிய ஆய்வரங்கில் இந்தியா என்றால் வடமொழி என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுவது போல் தமிழ் பற்றிய நினைப்பு எழுவதில்லை, தமிழ் மிகப் பழங் காலத்திலேயே செம்மையுற்றிருந்ததுடன் பெருமை மிக்க சங்கப் பாடல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கியுள்ளது. இப் பாடல்கள், தமிழரின் பண்பாட்டினைச் சிறப்பு நிலையில் எடுத்தியம் புவதே தம் தனிப்பண்பாகக் கொண்டுள்ளன. இப்பாடல்களைப் பல் வேறு நிலையிலும் பயின்று, இவை பற்றித் தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் எழுதி, இவற்றைப் பயிலும் ஆவலை உலகெங் கணும் பரப்பவேண்டும்.


சங்கப் பாடல்கள் தனிப்பாடல்களின் தொகுப்பேயாகையால் அவை பரந்தகாலப் பரப்பின் பண்பாட்டுப் பலகணியாய் விளங்கு கின்றன. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பண்பாடு, அச்சமுதாயத்தில் உள்ளடகிங்கியிருந்த எல்லாக் குழுவினரதும் பண்பாட்டையும் விரிந்த நோக்கில், அச்சமுதாயத்திலிருக்கும் ஒவ்வொரு தனிமனி தனின் பண்பாட்டையும் கொண்டதாயமைகின்றது. பல்லாண்டு கால வரலாற்றுப் பாதையில் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்த பல்வேறு


X|


பிரிவுகளைச் சார்ந்த மக்களதும் எண்ணங்கள், அவர்கள் நடை முறைப்படுத்திய செயற்பாடுகள் எல்லாமே தமிழ் மக்கள் எண்ணங்கள், நடைமுறைகள் முதலியவற்றுடன் கலந்துள்ளன இவற்றுட் சில தமிழ்மக்கள் எண்ணத்திலும், அதன்வழி அவர்கள் கொண்ட செயற்பாடுகளிலும் ஒன்றாகக்கலந்து விட்டன. இவற்றை இனங்காண்பது அரிது வேறு சில பண்புகள் ஒன்றாகக்கலந்தாலும் இவந்றை இனங்கண்டு கொள்வது இன்றைய நிலையிலும் எளிதாகின்றது. எடுகோளாகச் சங்ககால மன்னன் யாகம் செய்தானென்ற செய்தி தமிழ் மன்னனது செய்கையாக இருந்தாலும் அது வடவாரியர் சமயக்கிரியைகளில் ஒன்று என்பதை இனங்கண்டு கொள்வது சாத்தியமாகின்றது. இத்தகையவற்றைக் கொள்கையளவில் பிரித்தெடுத்து நோக்கமுடித்தாலும், நடைமுறையில் அவை தமிழ் மக்கள் மன தில் விட்டுச் சென்ற சுவடுகளின் மறைமுகத் தாக்கத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து நோக்க முடிவதில்லை


ஒரு குறிப்பிட்ட எண்ணங்களைப், பழக்கவழக்கங்களைச், செயல்களை உடைய ஒரு சமுதாயத்தினுள் இன்னொரு பண்பாட்டுப்பின்னனியுடையோர் புதுவாழ்வு குறித்தோ, தம் எண்ணப்பரப்பு தல்களுக்காகவோ வந்து சேரும்போது, இருபண்பாட்டின் கலப்பும் ஓரளவிற்காவது ஏற்படத்தான் செய்கின்றது. வந்தோரை, அந்நாட்டில் இருந்தோர் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே இந்தப் பண்பாட்டுக் கலப்பின் செறிவும் அமை கின்றது. இந்தப் பண்பாட்டுக் கலப்பின் செறிவு அக்காலப் புலவர் களின் எண்ணங்களையும் தொடுகின்றது அதன் விளைவாக அவர்கள் படைக்கும் இலக்கியங்களும், அங்கு வந்து புதிதாகச் சேர்ந்த பண்பாட்டின் சாயங்களலால் நனைக்கப்படுகின்றன, இந்தப் பண்பாட்டுச் சாயம் எவ்வளவு முன்னைய பண்பாட்டி னுடைய சாயத்தை மாற்றியுள்ள தென்பதை இலக்கியங்களில் ஆட் சியுடையோரால் இனங்கண்டு கொள்ள முடியும். இவ்விதம் இனங் காணும் முயற்சியின்போது சமனற்ற வழிவகைகளைக் கடைப்பிடித் தால், தவறான முடிவுகள் பிறப்பதுடன் அம்முடிவுகள் படிப்போர் மனதில் ஆழமாகப் பதிவதற்கும் வாய்ப்புண்டு.

எனவே தான் தமிழ் நாட்டினுடைய ஒரு குறிப்பிட்ட காலப் பண்பாட்டைப் பற்றிய அறிவைப்பெற அக்காலப் பகுதியில் வாழ்ந்த மக்களின் எண்ணங்கள், அவற்றின் வழியாக அவர்கள் கொண்ட நடைமுறைகளைத் தெரிந்து கொள்வதுடன், அக்காலப்பகுதியில் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்த ஏனைய மக்களைப்பற்றிய விரிவான 

xi


தெளிவான அறிவும் வேண்டியுள்ளது. ஊகத்தால் எழும் முடிவுகளை அடித்துக்கூறி விட்டால் மட்டும் போதாது. அவை குறுகிய காலத்துள் ஆட்டம் கண்டுவிடும். அப்போது உண்மைநிலை, ஊகம் எனும் போர்வையினின்றும் வெளிக் கொணரப்பட்டுவிடும்


தமிழ் நாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குப்பின் வட நாட்டிலிருந்து பல்வேறுவகை மக்களும் வந்துள்ளனர். இவர்களிற் பலர் வடநாட்டில் தோன்றிய தமது மதக் கொள்கைகளை த் தமிழ் மக்களிடையேயும் பரப்பலாம் என எண்ணினர். இதுவே பலரது உள் நோக்காக இருந்திருக்கவேண்டும். இது நாம் இன்று கிடைக்கும் இலக்கியங்கள் வாயிலாக அறிந்து கொள்ளும் செய்தி.


இந்தியா ஒருமொழி பேசி, ஒரு மதத்தைக் கடைப்பிடித்த நாடாக நீண்டகாலம் இருக்கவில்லை. ஆரியமக்கள் தம் வேதத்தைக் கொண்டு இந்தியாவிற்குள் நுழைந்த காலத்திலேயே, இந்தியாவில் ஏற்கனவே நிலைப்படுத்தப்பட்ட வலுமிக்க எண்ணங்கள் கொண்ட மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள் வேதத்தைத் தம் பிரமாணமாகக் கொண்ட வைதீக மக்களை எதிர்த்துள்ளனர். அவர்கள் வேதத்தை எதிர்த்ததுடன், முன்னர், மக்கள் மனதில் ஊன்றிக் கிடந்த எண்ணங்களுக்கு உருக்கொடுத்து, அவற்றை வலுப்படுத்தி மக்களிடை அவற்றை நிலை நிறுத்தி வைதீக மதத்தினை எதிர்த் தனர். இந்த முயற்சியில் தோன்றிய மதங்கள் தான் பௌத்தம் சைனம், ஆசீவகம் என்ற மூன்றும். இவர்களிடை உள்ள அடிப்படை ஒற்றுமை, மூவரும் வைதீகக் கொள்கைகளைக் (வேதங்களை நம்பும் கொள்கையினர்) குறிப்பாக வைதீக மதத்தோர் யாகங்களில் கொடுக்கும் உயிர்ப்பலிகளை எதிர்த்து நின்றமைதான். உண்மை யில் சைன தீர்த்தங்கரரான மகாவீரரும், ஆசீவகமதத் தலைவனான மக்கலி கோசலரும் தொடக்ககாலங்களில் ஒன் றா கவே தம் எண்ணக் கோட்பாட்டுருவாக்கத்திலும், தவமுயற்சிகளிலும் செயற்பட்டுள் ளனர். பின்னர் தான் இவர்கள் தமக்குள் தோன்றிய கருத்து வேறு பாட்டால் தனித்தனி மதங்களை உருவாக்கினர். இத்தகைய எண்ணங்களைக் கொண்டமக்கள் தமிழகத்திற்கு வந்து அங்கு தம்மையும் தம் எண்ணங்களையும் நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது எடுத்த இலக்கியங்கள் அவை தமிழ் மக்களிடை ஏற்படுத்திய பண்பாட்டுக் கலப்பின் சுவடுகளையும் எடுத்தியம்புகின்றன. இலக் கியங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், மக்கள் மன திலும் அவர்கள் எண்ண உருவாக்கங்களிலும் செயல்முறைகளிலும் ஏற்பட்ட மாற் றங்களையும் எடுத்துக்காட்டுவன வாயமைகின்றன. எனவே தான்


xii


இவ்விதப் பண்பாட்டு வளர்ச்சிகளை எடுத்துக்காட்டும் நூல்களைப் பயிலும் போது அந்த வளர்ச்சி நிலைகளையும், அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காகப் புதிதாகக் கலந்து கொண்ட பண்புகளைப்பற்றிய முழுமையான அறிவைத்தேடிக்கொள்ள வேண்டியவர்களாகின்றோம் முயற்சியில் ஒரு நிலையாகவே ஆசீவகர்களைப் பற்றிய இந்த நூல் அமைகிறது இந்த ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் தன் காப்பியப் பொருள்களில் ஒன்றாகக் கொள்வதும் “விதி விதி விதி இது மகனே' எனப் பாரதியார் திருதராட்டிரன் வாயிலாகப் பாஞ்சாலி சபதத்தில் அலறுவதும் இன்று தமிழ்ட் பொதுமக்களிடை மட்டுமென்றித் தமிழாய்வாளர்களிடமும் ஒரேவகை எண்ண அடிப்படையில் எழுந்த வெளிப்பாடாகத் தென்படலாம். இந்த விளக்கத்தின் மேல் கட்டப்பட்ட கருத்தொருமையாலேயே, விதியும் வினையும், ஊழும் வினயும், ஒருபொருட்குறித்த சொற்களாக இலக்கியங்களில் கையாளப்பட்டும் அது போலவே இச்சொற்கள் கையாளப்பட்ட இலக்கியங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டும் வந்துள்ளன. ஆனால் உண்மைநிலை அதுவல்ல ஊழ்வேறு வினை வேறு; கர்மா வேறு விதி வேறு: ஊழும் விதியும் அதேபோலவே வினையும் கர்மாவும் ஒருபொருட்குறித்த இரு சொற்கள்


ஊழ் எனும் விதி ஆசிவகர்கள் மதக்கருத்தின் மையக்கல், கர்மா எனும் வினை சைனர்கள், பௌத்தர்கள், இந்துமதத்தோர் ஏற்றுக் கொள்ளும் ஓர் எண்ணக்கோட்பாடு. ஊழ் எனும் விதியின் செயற்பாடு தனிமனிதனின் முயற்சியையோ செய்கைகளையோ அடிப்படையாகக் கொண்டதல்ல, ஊழ் எனும் விதி ஒரு உயிர் கருவிற்பட்டபோதே நியமிக்கப்பட்டுவிடும். ஆனால் கர்மா எனப்படும் வினையோ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒருமனிதன் ஒன்ற னைத்துய்க்கும் போது, அது, அவன் இன்றோ நேற்றோ, இப் பிறப்பிலோ முற்பிறப்பிலோ செய்த செயலின், எண்ணத்தின் அடிப்படையாக வந்த விளைவாகவே இருக்கும் அவ்வினை களை அவன் தன் முயற்சியினாற்றான் களைய முடியும். எனவே ஆசீவகர்கள் விதியும், சைனர்கள், பௌத்தர்கள் இந்துக்கள் கூறும் வினையும் ஒன்றல்ல. இவற்றின் வேறுபாட்டைத் தொடக்கநிலை யிலிருந்து காட்டி விளக்குவதே இந்த நூலின் முதன்மையான நோக்கமாகும். இந்த வேறுபாட்டைத் தெளிவுறப்புரிந்து கொண் டாற்றான் தமிழிலக்கியங்களில் இச்சொற்கள் வெளிப்படுத்தும் கருத்தைத் தெரிந்துகொள்ள முடியும். இக்கருத்துக்களைக் கலப்பற்ற நிலையில் மனதில் தெளிவாகப் பதித்தாற்றான் தமிழ்மக்களின் பண்பாட்டு வளர்ச்சிகள், இந்த மதங்களின் வளர்ச்சிக்குத் தமிழ் மக்கள் அளித்த எண்ணக் கொடைகள் ஆகியவற்றைத் துல்லிய மாகவும் தெள்ளிதாகவும் உணர்ந்து கொள்ளமுடியும்.


இந்த நூலின் உருவாக்கத்தில் பலர் உதவியுள்ளனர். நான் பணிபுரியும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநர்களாக இருந்த பேராசிரியர். ச. வே சுப்பிரமணியன், பேராசிரியர் அ. ந. பெருமாள் இருவரும் இவ்வாய்விற்கு ஊக்கமூட்டியவர்கள். இன்றைய இயக்குநரான பேராசிரியர் க. த. திருநாவுக்கரசு இந்நூல் முழுமையையையும் படித்து அணிந்துரை நல்கியவர். இவர்களுக்கு நான் நன்றியும் கடப்பாடு முடையேன். அறிவியலாய்வாளருக்கு ஆய்வுக்கூடம் போல இலக்கிய ஆய்வாளருக்கு நூலகங்கள். இந் நிறுவன நூலகர்கள் திகுமதி. அ. யோகமும், திருமதி. இரா. பார்வதியும் இங்கு ஆய்வு செய்வோருக்கு மனங்கோணாது உதவிபுரி பவர்கள். இவர்களுக்கும், இவர்களைப்போலவே எனக்கு உதவி புரிந்த அடையாறு நூலகம், சென்னைப்பல்கலைக்கழகநூலகம், கல் கத்தாதேசீய நூலகம், 'உ. வே. சாமிநாதைய்யர் நூலகம் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை நூலகம், பல்கலைக்கழக மேற்கு ஜெர் மணியசை சார்ந்த ஹம்பேர்க் நூலகம், பிரெஞ்சு நாட்டுத் தேசிய நூலகம், ஆகியவற்றின் நூலகர்களூக்கும் என்றும் நன்றியுடையேன்.


ஆசீவகர்கள் பற்றிய என் கைக்குக் கிட்டாத சில ஆய்வுக் கட்டுரைகளை எனக்கு அளித்ததுடன் நான் அங்கு இருந்த ஒரு திங்கள் காலத்திலும் (ஏப்ரல், 1987) பெறற்கரிய எண்ண ங்களை நல்கிய சுவீடனைச்சார்ந்த, உப்புசாலா, பல்கலைக்கழகப் பேரா சிரியை (திருமதி) குனிலா எல்குண்ட்டிற்கும் (Prof. Mrs. Gunila Elkund) பேராசிரியை (திருமதி) ருத் வால்டனுக்கும் (Prof. Mrs Ruth Wallden) நான் பெருநன்றியுடையேன். அதே போல் பாரீஸ் நகரத்திலுள்ள சோர்போன் (Sorbonne) பல்கலைக்கழகத்தில் (மே 1987) ஆசீவகர்களைப் பற்றிச் சிறப்புரை ஆற்ற வாய்ப் பளித்த பேராசிரியை திருமதி கலே (Prof. Mrs.Caillet). டாக்டர் நளினி பல்பீர் (Dr. Nalini Balbir) இருவருக்கும் இச்சிறப்புரையின் 


xiv


முடிவில் என் ஆய்வுணர்வைத் தூண்டும் வகையில் வினாக்களை எழுப்பி கலந்துரையாடிய பேராசிரியர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல. ஆசீவகர்கள் தொடர்பான சில ஆக்கபூர்வமான எண்ணக் கொடைகளை நல்கிய பேராசிரியர். ஆ. சிவலிங்கனா ருக்கும் நான் நன்றியுடையேன்


துன்பத்திலும் இன்பத்திலும் என் எண்ணங்களை நடுநிலைப் படுத்தி உறுதுணையாய் எனை வழிநடத்தும் என்குடும்பத்தினருக்கு நான் நன்றியும் கடப்பாடுமுடையேன். நூலை அச்சேற்றும் காலத்தில் பல்வேறு நிலைகளிலும் எனக்குத் துணைசெய்த எனது ஆய்வு மாணவி செல்வி பா. அருள்செல்விக்கும் இந்நூலை அச்சேற்றிய விஜயா அச்சகத்தினரான திரு. சுப்பிரமணியனுக்கும் என் நன்றிகள்


உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்


சென்னை


14-7-88.


ர. விஜயலட்சுமி



தமிழகத்தில் ஆசீவகர்கள்-அணிந்துரை


அணிந்துரை


இந்தியச் சிந்தனையை வளமும், வனப்பும் பெறச் செய்த மூதறிஞர் குழுக்கள் பல. அக்குழுக்களுள் சில, பொன்றாப்புகழ் வாய்த்த சமயங்களாக வளர்ச்சியுறும் வாய்ப்பைப்பெற்றன. இதனால், அவை காலப்போக்கில் மக்கள் இடையே பெருவாழ்வு பெற்றன. வேறுசில குழுக்களின் எண்ணங்களும், நெறிமுறைகளும் மக்களுடைய ஆதரவைப் பெற இயலாமல் போய்விட்டன. இதன் விளைவாக, அக்குழுக்களைச் சேர்ந்தோர், நாளடைவில் தம் கொள்கைகளோடு நெருக்கமான தொடர்பும், நாட்டு மக்கள் இடையே செல்வாக்கும் பெற்று விளங்கிய கொள்கைக் குழுவினரோடு இரண்டறக் கலந்துவிட்டனர்.


இத்தகைய 'அவலநிலையை' அடைந்த சிந்தனைக் குழுக்களுள் ஒன்றே , 'ஆசீவகரின் அமைப்பாகும்


உலக வரலாற்றில், கி.மு ஆறாம் நூற்றாண்டு தத்துவ எழுச்சிக் காலமாக விளங்குகிறது


அக்காலகட்டத்திலேயே, நம்முடைய நாட்டில் ஆசீவகமும் சமணமும், பௌத்தம் அரும்பின


மக்கலி கோசலர் எனும் ஞானியின் எண்ணப் போக்கைத் தழுவி ஒழுகியவர்களே ஆசீவகர் என்று சுட்டப்பட்டனர். இக்குழுவினரை பற்றி. குறிப்புகள் பண்டைக்காலத் தமிழகத்தின் தமிழிக் கல்வெட்டுக்களில் முதன்முதலாகக் காணப்படுகின்றன தேவார காலத்தில், “கேரையர் எனும் பெயரால் சுட்டப்பட்டவர்கள், ஆசீவகர்களாக இருக்கலாம் என்பது பல்கலைச் செல்வர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனாரின் கருத்தாகும். சமணர்களுள் ஒரு பிரிவினராக ஆசீவகர்ளைக் கருதும் நிலைமை கிறித்துவநூற்றாண்டின் தொடக்கத்திலேயே உண்டாகிவிட்டது. இதனால், இவர்களுடைய வாழ்வும், சிந்தனையின் நோக்கும் போக்கும் இருட்படலங்களால் மறைக்கப்பட்டுவிட்டன


இந்தச் சிந்தனையாளர்கள் பற்றிய குறிப்புகள், நம் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அருகியே காணப்படுகின்றன


VI


பிராகிருத மொழிகளிலும் தமிழிலும் காணப்டும் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டும், வடமொழி நூல்களின் குறிப்புகளைத் தேவையான இடங்களில் துணைணயாகக் கொண்டும், "தமிழகத்தில் ஆசீவகர்கள் எனும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது நாலினுள் நான்கு இயல்கள் உள்ளன. அவை இந்


(1) முன்னுரை,


( தமிழ் நூல்களில் ஆசீவகக் கோட்பாடுகள் தமிழ் இலக்கியத்தில் வாழ்,


(1) தமிழகத்தில் ஆசிவகர்கள் பற்றி இலக்கியம் தவிர்ந்த ஏனைய செய்திகள் என்பனவாகும். இவற்றோடு பின் இணைப்பு, “ஆசீவக நெறியினை விளக்கும் தமிழ் நூற்பகுதிகள்' எனும் குறிப்புகளும் சேர்க்ப்பட்டுள்ளன


இன்றுவரை, ஆசீவகர்களை பற்றிய நூல் யாதும் தமிழில் வெளிவரவில்லை . தமிழில் வெளிவரும் முதல் நூலாக இதனைச் கட்டலாம். இந்நூல் சிறு வடிவிலான ஓர் ஆராய்ச்சி நூலாகும்


இந்நூலின் மூன்றாவது இயலான 'தமிழ் இலக்கியத்தில் 212 ழ் எனுர் பகுதி, தமிழ் அறிஞர்களுடைய கருத்தைக் கவருவதாகும்.


பண்டைத்தமிழ்ச் சான்றோர்களும் இக்கால மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களும் வைதீக சமயத்தினர் கூறும் வினைக்கொள் கைகளையும் தலைவிதி பற்றிய நம்பிக்கைகளையும் பின்னணியாகக் கொண்டு 'ஊழினை விளக்குவது இல்லை! யாதோ ஒரு முறைப் படி மக்கள் வாழ்க்கையை இயக்குவது தான் ஊழ் என்பது தமிழறிஞரின் துணிவாகும். இந்த எண்ணப்போக்கிற்குரிய 'கரு முதலை' இந்த நூலின் மூன்றாவது யெயில் காணுகின்றோம் ஆசீவகர்களுடைய சிந்தனைத் தாக்கமே, பண்டைத் இடையே இத்தகைய எண்ணப்போக்கை எழுச்சியுறச்செய்து

தமிழர் இருக்கிறது என்பதனை இந்த நூலாசிரியர், நன்கு விரித்துரைத் துள்ளார் (பக். 42-60). இவ்வகையில், இந்நூல் தமிழருடைய சிந்தனைக்கு ஊற்றம் அளிப்பதாக அமைகிறது


இந்த நூலை உருவாக்கியவர் டாக்டர். திருமதி. ர. விஜயலட்சுமி என்பவராவர். இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் ஆராய்ச்சிப் பணிகளை இவர் மேற்கொண்டுள்ளார். மறைந்த மொழியியல் மாமேதை டாக்டர். டி. பர்ரோ அவர்களிடம் ஆராய்ச்சி மாணவி

vii


யாகப் பயின்றவர் இவர். டாக்டர். விஜயலட்சுமி அவர்கள் பிராகிருத மொழியில் வல்லுநர். தமிழின் சிறப்பை உலகிற்குப் புலப்படுத்தும் நூல்களை வருங்காலத்தில் இவர்களிடமிருந்து தமிழ் கூறும் நல்லுலகம் எதிர்பார்க்கிறது


இந்நூல் தமிழிற்கு ஒரு புதிய வரவு! இதனால், தமிழ் மொழி வளம் பெறும் என நம்புகின்றேன்


சென்னை ,


ஆனி. 20 ; தி. ஆ. 2019


4-7-1988


க. த. திருநாவுக்கரசு