Thursday, December 7, 2017

காலத்தை வென்றவன் நீ,

காலத்தை வென்றவன் நீ,

படம்: அடிமைப்பெண்
பாடல்: அவினாசி மணி
பாடியவர்கள்: பி.சுசீலா, எஸ். ஜானகி
இசை: திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்.
இயக்கம்: கே.சங்கர்.

காலத்தை வென்றவன் நீ, காவியமானவன் நீ,
வேதனை தீர்த்தவன், விழிகளில் நிறைந்தவன்,
வெற்றித் திருமகன் நீ.....(காலத்தை)
நடந்தால் அதிலும் ராஜநடை, நாற்புறம் தொடரும் உனது படை.
நடந்தால் அதிலும் ராஜநடை, நாற்புறம் தொடரும் உனது படை.
போர்க்களத்தில் நீ கணையாவாய்,
கோவைக்கிளிக்கேற்ற துணையாவாய்.
போர்க்களத்தில் நீ கணையாவாய்,
கோவைக்கிளிக்கேற்ற துணையாவாய்.  (காலத்தை)
அழகாக, விடிந்திடும் பொழுதும் உனக்காக,
வேங்கையின் மைந்தனும் எனக்காக,
அழகாக, விடிந்திடும் பொழுதும் உனக்காக,
வேங்கையின் மைந்தனும் எனக்காக,
ஓயாத உழைப்பதில் சூரியன் நீ,
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ.  (காலத்தை)
பாவாய், பாவாய் பாரடியோ, பார்வையில் ஆயிரம் வேலடியோ,
பாவாய், பாவாய் பாரடியோ, பார்வையில் ஆயிரம் வேலடியோ.
தங்கம் தங்கம் உன்னுருவம், தங்கம் தங்கம் உன்னுருவம்
தாங்காதினிமேல் என் பருவம்.
வேதனை தீர்த்தவன், விழிகளில் நிறைந்தவன்,
வெற்றித் திருமகன் நீ......( காலத்தை)
சுடராக, தோளின் புகழ்மலை சுடராக, தோகையின் நெஞ்சம் மலராக,
சுடராக, தோளின் புகழ்மலை சுடராக, தோகையின் நெஞ்சம் மலராக,
உள்ளத்தில் இருக்கும் கனவாக, ஊருக்கு தெரியா உறவாக,
உள்ளத்தில் இருக்கும் கனவாக, ஊருக்கு தெரியா உறவாக.
காலத்தை வென்றவன் நீ, காவியமானவன் நீ,
வேதனை தீர்த்தவன், விழிகளில் நிறைந்தவன்,
வெற்றித் திருமகன் நீ....
காலத்தை வென்றவன் நீ, காவியமானவன் நீ..
அஹஹஹஹஹ..அஹஹஹஹஹ..அஹஹஹஹஹ..
அஹஹஹஹஹ..அஹஹஹஹஹா...
ஆ.ஆ..ஆ.......ஆ.ஆ.ஆ.....ஆ...ஆ...ஆ...ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
லலலாலாலாலாலா..லலலா..லா..லா..
லலலலலலலலலலலலா...லா..லா..ஆ..ஆ..ஆ..ஆ..
ஆ...ஆ...ஆ..ஆ..ஆ..ஆ...ஆ..ஆ............ஆ....ஆ...ஆ...
ஆ.ஆ.ஆ...ஆ.ஆ.ஆ...ஆ.ஆ.ஆ.....................
ஆ...................ஆ................ஆ...................ஆ..

No comments:

Post a Comment