Saturday, September 30, 2017

வா.. காத்திருக்க நேரமில்லை

வா.. காத்திருக்க நேரமில்லை

movie Kathirikka Neram Illai(1993)

Singers: SPBalasubramaniam & SJanaki
வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நீ பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
விரக தாபம் விளையும் காலம்
விலகியிருந்தால் வாடை வாட்டும்.. வா..
வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நான் பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..

ஏதோ ஓர் பாதரசம் ஏறும் உயிர் நாடியிலே.. ஹா..
காந்தம் உருவாகுமடி கூடும் இளஞ்சோடியிலே
வளைக்கைகள் நீ சொன்னால் வளைக்காமல் போகாது
வலிக்காது சீராட்டு.. சலிக்காது பூ மாது
ஆசை ஊற்று போலே வெள்ளமாகப் பாயும் நேரமே
ஆடை ஈரமாக நீயும் நானும் நீந்த வேண்டுமே

வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நான் பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
விரக தாபம் விளையும் காலம்
விலகியிருந்தால் வாடை வாட்டும்.. வா..
வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓ..

மாலை மணி ஐந்தடித்தால் மான்தான் உனைத் தேடி வரும்
காவல் ஒன்று போட்டு வைத்தால் கால்கள் அதைத் தாண்டி வரும்
இடை சேர்ந்த பின்னாலே இடைவேளை கூடாது
இணை சேர்ந்த ஜீவன்கள் தனித்தென்றும் வாழாது
பெ: அன்பே.. நீல வண்ணம் வானையென்றும் நீங்கிடாது
மீட்டும் விரலில்லாது வாழ்வதேது வீணையானது

வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நீ பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
விரக தாபம் விளையும் காலம்
விலகியிருந்தால் வாடை வாட்டும்.. வா..
வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நான் பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
...

No comments:

Post a Comment