ட,ண,ன,ர,ற
மூனுசுழி “ *ண* ” , ரெண்டுசுழி “ *ன*” என்ன வித்தியாசம்?
படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த
நடிகர்திலகம் சிவாஜி கணேசன்.
கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்!
என்னப்பானு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-
“தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம் 4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?
தமிழ் எழுத்துகளில் -
ரெண்டுசுழி ன என்பதும் தவறு!
மூனுசுழி ண என்பதும் தவறு!
*ண* இதன் பெயர் *டண்ணகரம்*,
*ன* இதன் பெயர் *றன்னகரம்* என்பதே சரி.
மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி *ண*கர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து *ட* வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு *டண்ணகரம்*னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)
தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி *ன*கர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து *ற* வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு *றன்னகரம்*னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)
இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம இதுகள நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)
வேற மாதிரி சொன்னா
இதுவும் *வர்க்க ஒற்றுமை*தான்!
(வர்க்க எழுத்து-ன்னா,
சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)
இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்). இந்த *ண, ன* எழுத்துகளை அறிந்து கொண்டால் எழுத்துப் பிழையும் குறையும்.
எப்புடீ?
மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல *ட* இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி *ண* தான் வரும். ஏன்னா அது *டண்ணகரம்*.
கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ற இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும்.
ஏன்னா அது *றன்னகரம்*. என்று புரிந்து கொள்ளலாம்.
இதே மாதிரித்தான் நகரம் என்பதை, *தந்நகரம்*னு சொல்லணும்
ஏன்னா இந்த *ந்* எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் *த* மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).
https://youtu.be/csvFMl668H0