Monday, February 19, 2018

இரண்டு திருடர்கள்

தற்கால செய்தியா?
இல்லை
முக்கால செய்தியே..
--------------------------------------
நிலக்  கடலை திருட தோட்டத்திற்கு சென்ற இருவர் கடலையை  திருடிவிட்டு திரும்பும் போது ஒருவர் (அவர் கையில் கடலை செடியுடன் இருந்துள்ளார்)

தோட்டக்காவலாளியிடம் மாட்டிக்கொண்டார் இன்னொருவர் தப்பித்துக்கொண்டார்,

தோட்டக்காவலாளியிடம் மாட்டிக்கொண்டவர் தப்பித்துக்கொண்டவரிடம்

இரண்டு பேரும் தான் கடலை திருடினோம் நான் மாட்டிக்கொண்டேன், நீ எப்படி தப்பித்துக்கொண்டாய்? என்று கேட்டதற்கு தப்பித்துக்கொண்டவர் சொன்னார் "

"நான் கடலை செடியின் அடியில் துளைப்போட்டு பூமியின் அடியில் கைவிட்டு செடியின் அடியில் இருந்த கடலையை மட்டும் திருடினேன் நீயோ திருடத்தெரியாமல் செடியோடு திருடி மாட்டிக்கொண்டாய் "" என்றாராம்!

***அதாவது நீங்கள் எல்லாம் ஆதாரங்கள் இல்லாமல் பக்கா திட்டம் போட்டு மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக்கொண்டவர்கள் அவ்வளவு தான்!****

***ஆதாரங்கள் இல்லாததால் தப்பிய யோக்கிய (?)
அரசியல்வாதிகள் அவரவர் மனசாட்சிகளுக்கே தெரியும்!***

No comments:

Post a Comment