Sunday, January 28, 2018

இதோ எந்தன் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன்  கருணை உள்ள  நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே....

அவன் பூவிரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன்  கருணை உள்ள  நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே.....

பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே......

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன்  கருணை உள்ள  நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே.....

No comments:

Post a Comment