ல, லா, லி, லீ, லு, லூ, லெ, லே, லை, லொ, லோ, லௌ, ல்
லோகம் ~ சமஸ்கிருத சொல். "ல, லா, லி, லீ, லு, லூ, லெ, லே, லை, லொ, லோ, லௌ, ல்" என்ற எழுத்துகளைக் கொண்டு ஒரு தமிழ்ச் சொல் தொடங்கது, தொடங்கவும் கூடாது என்கிறது நம் தொல்காப்பியம். ஒரு தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வராது.
உலகம், பூமி, புவி, தரணி, அண்டம், அகிலம், வையகம், மண்ணகம் ~ தமிழ்ச் சொற்கள்.
வணக்கம், முத்துப் போன்ற தமிழ்ச் சொற்கள் இருக்க, வடமொழிச் சொற்கள் தேவையில்லை நமக்கு. தமிழ்ச் சொற்களின் பயன் அறியாதவரே, வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தித் தானும் கெட்டுத் தமிழையும் கெடுப்பர். தமிழை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப் படுத்தத்தான், தமிழ் வாழும், வளரும், நிலைத்திருக்கும். புறக்கணிப்போம் வடமொழிச் சொற்களை. ஒப்படைப்போம் தமிழ்ச் சொற்களுக்காவே நம்மை.
அத்திப் பூ பூப்பது போல், தமிழை அன்றும் இன்றும் சிலர் சங்கம் வைத்துக் காத்தே வந்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டில் கூட தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார். செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார். மரமாகத் தழைக்கச் செய்தவர் பாவாணர். உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உட்பட பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழ் வளர்ச்சிக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? என்ன செய்துகொண்டிருக்கிறோம் இன்று தமிழுக்காக?
பாலில் தண்ணீரைக் கலப்பின், பாலின் சுவை குன்றிவிடும். அதே பாலில் ஒரு துளி நஞ்சைக் கலந்தால் கூட, அப்பால் கெட்டுவிடும், அதைப் போலவே ஒரு மொழியும். என்றும் தமிழையும் வடமொழிச் சொற்களையும் கலக்கக் கூடாது.
உணவில் கலப்படம் இருந்தால் அது உடலைப் பாதிக்கும். மொழியில் கலப்படம் ஏற்பட்டதால் அது ஓர் இனத்தையே வீழ்த்திவிடும்.
நற்றமிழ சொற்கள் இருக்க அவற்றினிற்குப் பகரமாய் வேற்று மொழிச் சொற்களைத் தமிழினில் பயன்படுத்தி ஒழுகல் என்பது இயற்கையாய் நமக்கு இருக்கும் உடலுறுப்புகளை வெட்டி வீசி விட்டு மரத்தினால் ஆய உடல் உறுப்புகளை யாக்கையினில் பொருத்தி கொண்டு வாழ்தற்கு ஒப்பாகும்.
உடலுக்கு உயிரென்றால், ஓர் இனத்திற்குத் தாய்மொழியே மிக முகாமையாது என்பதை உணர்ந்து, நாளும் ஒரு தமிழ்ச் சொல் அறிவோம்.
வளர்க நல்ல தமிழ் மொழி வரலாறு
PLEASE SEND BHARANI NAKCHATHIRAM PENGAL NAME
ReplyDelete